கண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய இடம் உண்டு. புருவத்தை அழகாக திருத்தினாலே முகத்திற்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ளலாம்.
ஒவல் முகம் அழகாக
ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும். நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள் அழகாகத் தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும். புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.
புருவங்களின் இடைவெளி
குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.
கருப்பானவர்களுக்கு
நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.
கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
செய்யக் கூடாதவை
வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.
புருவத்திற்கு ஏற்ற ஐஷேடோ
உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம். கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம் அது கண்களின் அழகை அதிகரித்துக்காட்டும்.
 
 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment