வெட்டிவேர்
வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது.இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம்.இதன் வேர் மணத்துடன் இருக்கும்.
மண்அரிப்பைத் தடுக்கவும்,நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை,பயன்படுத்துதலும் இல்லை.வளர்ந்த காடுகளில் சாலைபராமரிப்பு,கழிவுநீர் சுத்திகரிப்பு,சுரங்க பகுதிகளில் மண்அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மருந்துவப் பயன்கள்
வேரின் பொடி குளிர்ச்சி தருகிறது.காய்ச்சல்
வயிறு எரிச்சல் போன்றவற்றிர்க்கு சுகமளிக்கிறது.வெப்பம் தணிக்க பசையாக
பூசலாம்.இது உடலின் வேர்வையையும் சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி
உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.
கூந்தல் மணக்க
வெட்டிவேர் -100கி
வெந்தயம் -100கி
இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்து எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.தொடர்ந்து உபயோகித்தால் முகத்தில் எண்ணெய்பசை இருக்காது.முடியும் நறுமணம் கமழும்.
சருமம் மிருதுவாக
பச்சைப்பயறு -100கி
சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர்-50கி
சிறு துண்டுகளாக்கிய வெட்டிவேர்-50கி
இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள்.இந்தப்
பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.தினமும் இப்படி குளித்து வந்தாலே
சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும்.சருமமும் மிருதுவாகும்.
பருக்கள் நீங்க
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் ஒருடீஸ்பூன் கொட்டை
நீக்கிய கடுக்காய்இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில்
ஊறவையுங்கள்.மறுநாள் இதை அம்மியில் அரைத்து அந்த விழுதை பருக்கள் மீது
முழுவதுமாக மறைப்பது போல் தடவுங்கள்.ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச்
செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும்.பருக்கள் இருந்த வடுவும்
தெரியாது.
பரு தழும்புகள் மறைய
பழைய பருக்கள் ஏற்படுத்தி விட்டுப் போன தழும்புகளால் சிலருக்கு முகம் கரடுமுரடாக இருக்கும் அதற்கான நிவாரணம்.
ஒருபிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு
மூடுங்கள்.ஒரு இரவு இது ஊரட்டும்.மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை
கொதிக்க விடுங்கள்.முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே
பிரித்து வையுங்கள்.
இப்போது கொதி நீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவிபிடியுங்கள்.அப்படியே முகத்தைத் துடைக்காமல் வெட்டிவேர் ஊறிய தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.வாரம் இருமுறை இப்படிச் செய்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
இப்போது கொதி நீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவிபிடியுங்கள்.அப்படியே முகத்தைத் துடைக்காமல் வெட்டிவேர் ஊறிய தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.வாரம் இருமுறை இப்படிச் செய்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
ஒரு ஸ்பெஷல் பேக்
வெட்டிவேர் ரோஜா மொட்டு ,மகிழம்பூ செண்பகப்பூ ,சம்பங்கி விதை இவற்றை
சமஅளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து நைஸான பவுடராக சலித்துக்
கொள்ளவும். இந்த பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி கழுவினால்
...வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும்.சம்பங்கி விதை
முகத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.ரோஜா சோர்வைப் போக்கி நிறத்தைக்
கொடுக்கும்.மகிழம்பூவும் செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தை போக்கி வாசனையை
கொடுக்கிறது.
உபயோகித்து பயன் பெறுவீர்.
உபயோகித்து பயன் பெறுவீர்.
No comments:
Post a Comment