Thursday, 12 October 2017

வைரலாக பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல் ! கவனமா இருங்க !


வைரலாக பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல் ! கவனமா இருங்க !டெங்கு காய்ச்சல்!..

🚫 1990ஆம் ஆண்டுகளில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்து உள்ளதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

🚫 உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த கொடிய நோய் வடக்கு அர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கியூபா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் பரவுகிறது.

நோய் கணிப்பு :

🚫 ரத்தத்தில் உள்ள லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு குறைதல்.

🚫 ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (pடயவநடநவள) எண்ணிக்கை குறைதல்.

🚫 உடலின் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை போன்ற சோதனைகளின் மூலம் நோய் இருப்பதை கண்டறியலாம்.

ஏடிஸ் கொசு :


🚫 ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும்.

🚫 இந்த ஏடிஸ் கொசுவானது அசுத்தமற்ற நீர்நிலைகளில் வளரக்கூடியவை. கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில் கடிக்கும்.

யாருக்கு ஆபத்து அதிகம்?


🚫 குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் :

🚫 2 நாட்கள் இடைவெளியில் விட்டு விட்டு காய்ச்சல் வருவது.

🚫 காய்ச்சலின் போது வாய்ப்பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது.

🚫 கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது.

🚫 காய்ச்சலுடன் மூச்சு திணறல் ஏற்படுவது.

🚫 குளிர், தலைவலி, கண்களை அசைக்கும் போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி, இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம் மற்றும் கால்களில் வீக்கம், கால்களிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியுடன் காய்ச்சல் போன்றவைகள் ஆகும்.

நோயுற்ற காலத்தில் :

🚫 காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.

🚫 உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

🚫 பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

விழிப்புணர்வு:


🚫 கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

🚫 தெரு மற்றும் வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்.

🚫 குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்து வைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

🚫 வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம்.

🚫 கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.

🚫 எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்.

🚫 டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

No comments:

Post a Comment