மழைக்கால நோய்கள் நம்மை பாதிக்காமலிருக்க செய்ய வேண்டியவைகள்!
பருவமழைக் காலமும்! பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும்!
✽ தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், நீர் ஆதாரங்கள் அனைத்தும் மாசுபடும். எனவே பருவமழையின் தாக்கம் சிறிது குறைந்ததும், நீர் மாசுபாடு தொடர்பான பல்வேறு நோய்கள் பரவக் கூடும்.
✽ மழைக்காலம் ஆரம்பம் ஆனாலே, ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன.
மழைக்காலங்களில் வரும் நோய்கள் :
✽ இருமல், சளி, காய்ச்சல், தலைவலி, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் மழைக்காலங்களில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுபோன்ற மழைக்கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டாலே பாதுகாப்பாக இருக்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
✽ மழைப்பொழிவு காலத்தில், வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், ஹோட்டல்களில் சாப்பிடுவது, காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.
✽ காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
✽ அடிக்கடி ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு நல்லது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளையும் நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம். ஈரமான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும்.
✽ தினமும் இருமுறை வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நலம். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தலைக்குக் குளிக்கலாம்.
✽ மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்காது. அதனால், தண்ணீர் அருந்தாமலேயே இருக்கக் கூடாது. சு+ப், ரசம், பால், டீ, காபி எனத் திரவ உணவுகள் மற்றும் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
மழைக்காலங்களில் சிறந்த உணவு :
✽ மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
✽ நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
✽ சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்கவிடக் கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருக்கலாம்.
✽ இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன வகையான காய்ச்சல் என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
✽ வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்கு கழுவ வேண்டும். மழைக்காலங்களில் நோய்களில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தினரையும் பாதுகாப்பது நமது கடமை ஆகும்.

No comments:
Post a Comment