Thursday 14 December 2017

மிளகின் மருத்துவ பயன்கள் - Health Benefits of Pepper - Benefits of Millagu

மிளகின் மருத்துவ பயன்கள் 

நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருளான மிளகு, என்னென்னெ மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதை முழுமையாகப் படித்து மிளகு தரும் மருத்துவ பயன்களை அறிந்துகொள்ளலாம்!

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் போல மிளகும் பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் அடங்கி உள்ள சக்தி அபாரமானது.

நம் உடல்நிலையே நமக்கு துன்பம் தர காரணம் உணவு. பெட்ரோல் காரில் டீசல் ஊற்றினால் என்னவாகும்? அதுபோல, நமது உடல் வாகுக்கு ஏற்றார் போல உணவை எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரச்னைதான்.

பல நோய்களுக்கு முக்கிய காரணமாயிருப்பது அஜீரண கோளாறு.

இதனால் வருவதுதான் வாயுத்தொந்தரவு, புளிப்பு ஏப்பம், அத்துடன் அதிக கொழுப்பான உணவை சாப்பிடுவதால் இதயத்தில் – இரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் சிறந்த மருந்து மிளகுதான்.

''பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்னு சொல்லுவாங்க…! அந்த அளவுக்கு மிளகுல விஷத்த முறிக்கக் கூடிய தன்மை இருக்கு…”




பத்து மிளகு சாப்பிட்டால் உடலை சீராக வைத்துக் கொள்ளலாம். இதயத்தை நல்ல நிலையில் இயங்க வைக்கும் ஆற்றலும் மிளகுக்கு இருக்கிறது. ஒவ்வாமை என்கிற அலர்ஜி இருப்பவர்கள், பத்து மிளகையும் அல்லது உங்களால் அதன் காரம் தாங்க முடியாதென்றால் ஐந்து மிளகை தூள் செய்து, அத்துடன் கல் உப்பையும், ஒரு வெற்றிலையில் வைத்து சாப்பிட்டால் 45 நாட்களுக்குள் எப்பேர்பட்ட அலர்ஜியும் நீங்கி விடும்.

ஆனால் அல்சர் – வயிற்றில் புண் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடவேண்டும், ஏன் என்றால் மிளகு, கார தன்மை கொண்டது. தொண்டைக் கம்மல் உடையவர்கள் பாலில் மிளகு தூள் கலந்து அருந்தினால் தொண்டைக்கம்மல் தீரும்.

மிளகோட குணங்கள்னு பாத்தா… அது விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு. அப்புறம்… பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கு.

திரிதோஷம்னு சொல்லப்படுற வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா அந்த பிரச்சனைகள்ல இருந்து விடுபடலாம். திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தா இருக்குது

மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்: கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்.

மருத்துவ குறிப்புகள்: (உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளுதல்) பசியின்மை – தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.

செரியாமை – மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.

ஜலதோஷத்தால் வந்த இருமல் – மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும். உடல் சூட்டினால் வரும் இருமல் – மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 (அ) 3 நாட்கள் எடுக்க தீரும்.


உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க – மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி – இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.

பூரான் கடி – வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். (பத்தியம்: உப்பு, புளி நீக்கல்)

புழுவெட்டுக்கு – மிளகு, வெங்காயம், உப்பு – அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் பூசிவர முடி முளைக்கும் (புண் ஏற்பட்டால் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பூசிவர புண் ஆறிவிடும்)

மிளகு இரசம் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும். மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞா­பகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

இது காரமும், மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க உதவுகிறது. விட்டுவிட்டு வருகின்ற முறை காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் நாள்தோறும் இரண்டுவேளை சாப்பிடவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்துத் தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும். சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.

இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம் புல்லையும், பத்து மிளகையும் பொடியாக இடித்து கசாயம் போட்டு அருந்தி வந்தால் எல்லாவித விஷக்கடிகளும் முறியும்.

சாதாரண காய்ச்சலுக் கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒருவேளை சாப்பிட்டுவர நல்ல பலன் தரும். சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும், சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல் வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 23 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும். 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன், 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு ஆண்டில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும், மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட, கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.

இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது.

வலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

* மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி போன்றவை குணமாகும்.
* மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.

தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.

மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.

மிளகு அவல்

முதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொண்டு, பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதேபோன்று முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், மிளகு அவல் உப்புமா ரெடி 

தினமும் மிளகை தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை காய்ச்சி ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தினால் உடல் நல்ல ஆராக்கியம் அடையும்.
மிளகு வாயு தொல்லையை தீர்க்கும் சக்தி கொண்டது மிளகு.


உஷ்ணதன்மையும், கார தன்மையும் மிளகுக்கு இருப்பதால் மாரடைப்பை தடுக்கும் சக்தி படைத்தது. மிக முக்கியமாக உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்கும் ஆற்றல் படைத்தது. எல்லா வித விஷங்களுக்கும் சிறந்த மருந்து மிளகு.


உணவில் தேவையான அளவில் மிளகை சேர்த்து சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தை பெறுவோம்.

No comments:

Post a Comment