முள்ளங்கியின் மருத்துவ பயன்கள் :

முள்ளங்கி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது. முள்ளங்கியை உணவில்
சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கட்டுப்படும்.
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. முள்ளங்கியை உணவில் சேர்த்து
கொள்வதால் தொண்டையில் ஏற்படும் வியாதிகள் நீங்கும். வயிற்று வலி, வயிற்று
எரிச்சல் போன்ற வயிற்று கோளாறுகள் குணமாகும். உடலில் தாதுபலம்
அதிகரிக்கும். உடலில் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல்
வீக்கத்தைக் குறைக்கும்.

முள்ளங்கியில் வைட்டமின்-சி, போலிக் அமிலம் நிறைந்திருப்பதால்
பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பல
வகையான புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தை தணிக்க
வல்லது. பசியை நன்கு அதிகரிக்க செய்யும். முள்ளங்கியில் கார்போஹைட்ரேட்
குறைவாக உள்ளதால் உடல் எடை குறையும். முள்ளங்கிச்சாற்றை குளிக்கும்
தண்ணீரில் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், தலையில் உள்ள
பொடுகு பிரச்சனை நீங்கும்.
No comments:
Post a Comment