பொதுவாக வீட்டில் சோறு வடித்த கஞ்சியை வீணாக கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது என யாருக்கும் தெரிவதில்லை.
சோறு வேக வைத்த அந்த கஞ்சியை அன்றாடம் உப்பு, மற்றும் மிளகு போட்டு குடித்து வர உடல் எடை 150 கலோரிகள் குறைந்து கட்டுக்குள் இருக்கிறது.
மேலும், வயிற்றுப் போக்கு இப்படி மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும். அதோடு மலச்சிக்கல், வைரஸ் தொற்று போன்றவற்றையும் குணமாக்க உதவுகிறது.
உடல் சுருசுருப்பாக இயங்கவும் உதவுகிறது. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். இவை கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கிறது.
அடுத்ததாக, கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
மேலும், சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தருகிறது. எனவே சாதம் வடித்த கஞ்சியை முடிந்த அளவு வாரத்தில் 4 நாட்களாவது பருகி வாருங்கள்.
No comments:
Post a Comment