பூச்சித் தொல்லை ஒழிய...
பூச்சித் தொல்லை ஒழிய...
கொசுத் தொல்லை ஒழிய...
- கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க
முடியாதவர்கள்.
- வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில்
பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது.
- தும்பைச் செடி உடலுக்கு
குளிர்ச்சியை தரக்கூடியது.
ஈ மொய்ப்பதை தடுக்க...
- சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு
குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ
மொய்க்காது.
பல்லியை விரட்ட...
- வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை
ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது.
- நாமும் பல்லி பற்றிய
பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.
எறும்புகள் வராமல் தடுக்க...
- எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால்
மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம்.
- அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும்
வராது. அதிகப் பவுடரும் ஆகாது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க...
- கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி
சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான்
பூச்சிகள் ஒழிந்து விடும்.
மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க...
- தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால்
எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள்
ஒழிந்து விடும்.
விஷக்கடி
- விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
பூச்சிக்கடி, உடல் அரிப்பு
- பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு
சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து
பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ
வேண்டும்.
தேள் கொட்டுதல்
- தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3
கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம்
வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில்
தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.
வேர்க்குரு, அரிப்பு
-
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.
-
வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.
-
பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால்
உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும
நோய்கள் வராது.
No comments:
Post a Comment