இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !
உணவுகள் !
உணவுகள் !
உணவு, மனிதனுக்கு இன்றியமையாதது. உடலை பேணி காப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவை காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் உண்ணுகிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
பகல் நேரத்தில் நாம் சாப்பிடும் உணவு நாம் செய்யும் வேலைகளால் எளிதில்
ஜீரணமாகிவிடும். அதே இரவு நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக
கூடியதாக இருக்க வேண்டும்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வதால் ஜீரண உறுப்புகள் ஆரோக்கியமாக
செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல், தூக்கமின்மை போன்ற
பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
இங்கு நாம் இரவில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பால் :
இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில்
அதிக அளவு புரோட்டின், கால்சியம் உள்ளது. இவை உடலுக்கு முக்கியமானது
என்றாலும் பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால்
அருந்துவதால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் சீரான தூக்கம்
பாதிக்கப்படும்.
சாக்லேட் :
சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை
உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், தூக்கம்
பாதிக்கப்படும். காஃபின் செரிமானத்தைப் பாதித்து அஜீரணக் கோளாறுகளை
ஏற்படுத்தும்.
இறைச்சி :
இரவில் இறைச்சியை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இறைச்சியில் அதிக அளவிலான
புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக நேரம்
எனர்ஜி தேவைப்படும். இரவு நேரத்தில் அத்தகைய ஆற்றல் கிடைக்காது. இறைச்சி
உணவுகள் ஜீரணமாக மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். ஆகையால், செரிமானக்
கோளாறு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும்.
கீரை :
இரவு உணவாக கீரையை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், இரவில் கீரையை
எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக
கலோரி வயிற்றை அசௌகர்யம் அடையச்செய்கிறது. இதனால், செரிமானக் கோளாறு
ஏற்படும்.
நீர்ச்சத்துள்ள உணவுகள் :
பூசணி, புடலை, சுரைக்காய், பாகற்காய், கோவைக்காய், தர்பு+சணி, சௌசௌ போன்ற
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது, அடிக்கடி சிறுநீர்
கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த
வகை உணவுகளை இரவில் சாப்பிடவே கூடாது.
பச்சைமிளகாய் :
இரவில், பச்சைமிளகாய் சாப்பிட்டால், உடலின் வளர்சிதை மாற்றம்
பாதிக்கப்படும். மிளகாயில் உள்ள அமினோஅமிலம், நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.
இதில் உள்ள புரோட்டின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
இதனால் தூக்கமின்மையும் உண்டாகிறது.
காபி மற்றும் டீ :
டீ, காபியில் உள்ள கேஃபைன் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும்.
மேலும், காலை வேளைகளில் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். டீயில் இருக்கும்
த்யோப்ரமைன் மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். தூக்கத்தை
விரட்டும். எனவே, இரவு நேரங்களில் காபி, டீயை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment